nisa-artcom: என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு

Tuesday, June 16, 2009

என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு


அன்பு வணக்கங்களுடன் நிசா!

ஓவியன், யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள மட்டுவில் என்னும் சிற்றூரைச் சேர்ந்வன். ஓவியக்கலை இறைவன் எனக்கு விஷேசமாகக் கொடுத்த பொக்கிஷம். ஒன்பது வயது முதல் தூரிகை பிடித்த விரல்கள் என்னுடையவை. எனக்குக் கிடைத்த வளங்களின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையினால் எனது திறமைகளும் ஒரு வரையறைக்குள் aஅடங்கிக்கொண்டன. முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், முயன்றதை அடைந்திருக்கின்றேன், அந்த வகையிலான ஒரு முயற்சிதான் இதுவும் என எண்ணுகின்றேன்.


1999 ஆம் ஆண்டு வட்டக்கச்சி கல்மடு விநாயகர் ஆலயத்தில் என்னால் வரையப்பட்ட முகப்பு ஓவியம்

நான் ஒரு ஓவியன், முகாமைத்துவப் பட்டதாரி, கடந்த எட்டு ஆண்டுகளாக நான் ஒரு தொழில் முறைக் கணினி வடிவமைப்பாளன். எனது இந்தப் பயணங்களின்போது பல புதிய உத்திகளையும் நுட்பங்களையும் அனுபவத்தில் கற்றுக்கொண்டதாக உணர்கின்றேன். இதே போன்று இத்துறையில் உள்ள ஆர்வலர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன். எனது திறமைக்கும் முயற்சிக்குமான உங்கள் ஆதரவு என்னை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். மொத்தத்தில் எனது 15 ஆண்டுகால கலை அனுபவத்தில் நான் மூழ்கி எடுத்த முத்துக்கள், உட்கிடையான நுட்பங்கள் எனப் பலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக உள்ளேன். எனது இந்த சிறு அறிமுகத்தில் எனது சுய சரிதையினை அதிகம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

எனது அனுபவங்களின் மூலமாக நான் பெற்றுக்கொண்ட நுட்பங்களினையும் சில படிமுறைகளினையும் எனது பதிவுகளில் பதிவிடுகின்றேன். அவை உங்களைக் கவர்ந்தால் அல்லது ஏதோ ஒருவகையில் உங்களுக்கு உதவியாக இருந்தால் என்னை மென் மேலும் எழுதத் தூண்டும் என எண்ணுகிறேன். கணினி வடிவமைப்பு சம்பந்தமாக எந்தவொரு மென்பொருளாயினும் சரி (Adobe Photoshop, Adobe Indesign, Adobe Illustrator, Adobe Pagemaker, Corel Draw, QuarkXpress) உங்களுடைய சந்தேகங்களுக்கு என்னால் முடிந்தளவு விளக்கங்களைத் தரமுடியும் என் எண்ணுகின்றேன். தொடர்ந்து உங்களது ஆதரவினை எதிர்பார்த்து இந்த அறிமுகத்தினை நிறைவு செய்கின்றேன்.


சிறுகதைகளுக்காக வரையப்பட்ட ஓவியங்களில் ஒன்று

நிசா







3 comments:

Anonymous said...

Hi

Anonymous said...

HI
Wonderfull, i am one of the older customers, i really like your art work, congratulation for your 15th anniversary, god bless you
N.R.Ramanan

Anonymous said...

சூப்பர் சூப்பர் எல்லாமே சூப்பர்

Post a Comment

 

Copyright 2010 All Rights Reserved NISA ARTS (Pvt) Ltd. by A.S.Nisa Converted into Blogger Template by Bloganol dot com