எம்மால் அண்மையில் தயாரிக்கப்பட்ட பட்டமளிப்பு விழா அல்பம் ஒன்றின் பக்கங்கள். எனது பல்கலைக்கழக நண்பன் எஸ். ஜெகநாதன் தற்போது லண்டன் கோவென்றி கல்லூரியில் (Coventry University - UK) நிதியியல் விஞ்ஞான முதுமானிமானி பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேலும் அவர் பல்வேறு துறைகளில் முன்னேறி வாழ்க்கையில் வெற்றபெற இறையருள் கூட இருக்கட்டும்.

இனி எமது வடிவமைப்புக்குள் வருவோம். பதிப்புத்துறையினை நவீன தொழில்நுட்பங்கள் ஆக்கிரமிக்கத்தொடங்கியவுடன் அதன் தரமும் அழகும் நன்கு பட்டைதீட்டப்பட்டுவிட்டன. அந்தவகையில் மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் அல்பத்தின் பக்கங்களே இவை. இத்தகைய அல்பங்கள் தயாரிப்புக்கு சற்று அதிகளவான பணம் செலவு ஏற்பட்டாலும் அதன் அழகும் உறுதித் தன்மையும் பலதரப்பட்டவர்களையும் கவருகின்றது.
இவ்வாறான ஒரு அல்பத்தினை எப்படி வடிமைப்பது பற்றி எனது அடுத்த பதிவில் விரிவாக பதிவிடுகின்றேன்.
(பின் குறிப்பு: தொடர்ந்து எனது பதிவுகளில் வடிமைப்புத் தொடர்கான பல நுணுக்கங்களையும் நுட்பங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன் என்பது வடிவமைப்பில் ஆர்வமுள்ளோருக்கு இனிய செய்தியாக இருக்கும் என நம்புகின்றேன்.)
5 comments:
Wow Fantastic Nisa Keep it up.
Pulavan
நிசா நீங்கள் உங்களது ஓவியத் திறமையைக் காட்டுகின்றீர்கள். மிகவும் நன்று மேலும் முன்னேறுங்கள் வாழ்த்துக்கள்.
நிகாரா
ஹாய்.. உங்களின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் வெற்றிகிட்ட இறைவன் உங்களுக்கு அருள் புரிவாராக....
தொடர்ந்து முன்னேறுங்கள், கிராபிக்ஸில் ஆர்வம் உள்ள எம்போன்றவர்களுக்கு நல்ல விடயங்களைத் பதிவிடுவதோடு சந்தேகங்களையும் முடிந்தவரை தீர்க்க உதவ வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
கௌரி
hey ,
your designs are nice.my wishes to you. work hard. you are getting brigt. congratulations.
karan
ஹாய், மச்சி நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன், செய்யும் தொழிழே தெய்வம். உனது வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
Post a Comment